Wednesday, 15 February 2012

மீண்டும் நினைக்கிறேன் ..


மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ..
உன் பற்றிய ஞாபகங்களை

உனக்கு என் பற்றிய நினைவுகளே
வருவதில்லையா..?
இல்லை
வரும்..
வராமல் இருக்காது..
நீ நிச்சயம் நினைப்பாய்…
அதெப்படி நினைக்காமல் இருப்பாய்..??
ஒரு நாளில்..ஒரு நாளிகயாவது நினைத்திருப்பாய்..
சமாதானம் செய்து கொள்கிறேன்..
என்னை நானே…
நான் தான் உன்னை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறேன்..நீ?
அது சரி..
உன்னில் பிழையொன்றுமில்லை..
நீ என்னை காதலித்தாய்..
நான் அறிவேன்..
நான் உன்னை காதலித்தேன்..

உன்னை பொறுத்தவரையில்..
நான் முடிந்து போன காதல்..
என்னை பொறுத்த வரையில்..

உன்னை காதலித்து கரம் பிடிப்பதற்கு
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன??
‘நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்காது’ என்பது..
உன் விடயத்தில்..
சரியாகத்தான் இருக்கிறது…
என்னுள் புதைந்து கிடக்கும்..
எண்ண அலைகளை அறிவாயா..
இந்த அலைகள் உன்னை நிட்சயம்
வந்து தாக்கும்
நான் காதலில்
தோற்றவன் அல்ல....

என் காதலின்
வெற்றிக்கு பரிசாக
எண்ணற்ற நினைவுகளை
நீயே தந்துள்ளாய் ...


ப்ரியமுடன் 
nrramesh

Friday, 10 February 2012

உன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழம்


"எல்லாம் நன்மைக்கே என்று எவ்வளவு தான் 


மனதை ஆறுதல்படுத்தி கொண்டாலும்

உன்னை இழந்துவிட்டேனே என நினைத்துவிட்டால் 


என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை  


அந்த கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும் 


நான் உன்மேல் வைத்திருக்கும்  அன்பின் ஆழம் என்னவென்று...."

நான் வாழும் வரை என்னுள் நீ  வாழ்வாய்......!!!! 

என்னுள் நீ வாழும் வரை 
உன் நினைவோடு நான்  வாழ்வேன்....!!!!!

அழுதிடும் என் கண்கள்  உன் நினைவுகளை  சுமக்கிறது...!!!
உன் நினைவே என்  வாழ்வாக போனதால்..???





ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நினைவுகள் ... 
காலங்கள் கடந்தாலும்  அழியாதது ... 
உன் மேல் வைத்த என்  காதல் ...
நான் இருக்கும் வரை என் கவிதைகளோடு.. 
உன் நினைவுகளும்  கலந்திருக்கும்.. 
என்றென்றும்  என் காதலுடன் 


ப்ரியமுடன் 
nrramesh

Wednesday, 8 February 2012

நீ என்ன செய்வாய் அன்பே....???



என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ நிறுத்திடலாம்
என் மனதை
நீ எரித்திடலாம்
உன்மேல் வைத்த என் காதலை
நீ என்ன செய்வாய் அன்பே....???

Thursday, 5 January 2012

" என் உயிரில் வாழ்வாய் "




உன்னைக்  காண வேண்டும்
என்று என் கண்களுக்கும்..!
உன்னுடன் கனவில் 
பேசும் என் தூக்கத்திற்கும் ..
கவிஞனாக வில்லை நான்..
காரணம் காதலியையும் 
காதலையும் முழுமையாய் ரசித்தேன்.
என் இதயம்  இறந்தா 
உயிர் வாழாது உடல்
அதனால் தான்..,
என் இதயம் இறக்கும் வரை
" நீ " என் உயிரில் வாழ்வாய்...!



ப்ரியமுடன் 
nrramesh





Monday, 2 January 2012

தலை விதி



எங்கோ இருந்த
என்னையும்
எங்கோ இருந்த
உன்னையும் சந்திக்க
வைத்தது
காதலின் விதி
உன் பினால் அலைய
வேண்டுமென்பது
என் தலை விதி