Wednesday, 15 February 2012

மீண்டும் நினைக்கிறேன் ..


மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ..
உன் பற்றிய ஞாபகங்களை

உனக்கு என் பற்றிய நினைவுகளே
வருவதில்லையா..?
இல்லை
வரும்..
வராமல் இருக்காது..
நீ நிச்சயம் நினைப்பாய்…
அதெப்படி நினைக்காமல் இருப்பாய்..??
ஒரு நாளில்..ஒரு நாளிகயாவது நினைத்திருப்பாய்..
சமாதானம் செய்து கொள்கிறேன்..
என்னை நானே…
நான் தான் உன்னை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறேன்..நீ?
அது சரி..
உன்னில் பிழையொன்றுமில்லை..
நீ என்னை காதலித்தாய்..
நான் அறிவேன்..
நான் உன்னை காதலித்தேன்..

உன்னை பொறுத்தவரையில்..
நான் முடிந்து போன காதல்..
என்னை பொறுத்த வரையில்..

உன்னை காதலித்து கரம் பிடிப்பதற்கு
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன??
‘நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்காது’ என்பது..
உன் விடயத்தில்..
சரியாகத்தான் இருக்கிறது…
என்னுள் புதைந்து கிடக்கும்..
எண்ண அலைகளை அறிவாயா..
இந்த அலைகள் உன்னை நிட்சயம்
வந்து தாக்கும்
நான் காதலில்
தோற்றவன் அல்ல....

என் காதலின்
வெற்றிக்கு பரிசாக
எண்ணற்ற நினைவுகளை
நீயே தந்துள்ளாய் ...


ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment