Friday, 10 February 2012

உன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழம்


"எல்லாம் நன்மைக்கே என்று எவ்வளவு தான் 


மனதை ஆறுதல்படுத்தி கொண்டாலும்

உன்னை இழந்துவிட்டேனே என நினைத்துவிட்டால் 


என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை  


அந்த கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும் 


நான் உன்மேல் வைத்திருக்கும்  அன்பின் ஆழம் என்னவென்று...."

நான் வாழும் வரை என்னுள் நீ  வாழ்வாய்......!!!! 

என்னுள் நீ வாழும் வரை 
உன் நினைவோடு நான்  வாழ்வேன்....!!!!!

அழுதிடும் என் கண்கள்  உன் நினைவுகளை  சுமக்கிறது...!!!
உன் நினைவே என்  வாழ்வாக போனதால்..???





ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நினைவுகள் ... 
காலங்கள் கடந்தாலும்  அழியாதது ... 
உன் மேல் வைத்த என்  காதல் ...
நான் இருக்கும் வரை என் கவிதைகளோடு.. 
உன் நினைவுகளும்  கலந்திருக்கும்.. 
என்றென்றும்  என் காதலுடன் 


ப்ரியமுடன் 
nrramesh

No comments:

Post a Comment