Monday, 30 August 2010

உன் பெயரை அழைத்தேன்...


முதல்  முறையாக 
உன்னைப் பார்க்க முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றதும் அன்று தான்..
அருகில் வந்து உன்னிடம்..,
உன் பெயரை ....
முதல் முறையாக அழைத்தேன்...

Wednesday, 25 August 2010

என்னுடன் பேசுவாயா






ஒரே ஒரு முறை தான் என்றாலும் 

ஒரே ஒரு கணம் தான் என்றாலும்

உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் நான். 

மறுகணமே 

அது கடைசி சந்திப்பாய்

ஆன பொழுது முதல் 

இந்த நிமிடம் வரை

ஈரம் நிறைந்த இம்மனதில்

உன் நினைவை தவிர வேறொன்றுமில்லை..

சொல்ல முடியாத உன் காதலை 

சொல்லி கொண்டிருந்ததே 

உன் மௌன பார்வை என்னிடம்.

திறக்காத உன் இதழ்கள் கூட 

திருடி விட்டு போனதே என் இதயத்தை..

15.08.2010
அன்று

எங்கே தொலைத்தாய் ...???

எனக்கான உன் வார்த்தைகளை.....

நீ பேசுவாய் என்று நானும்..

நான் பேசுவேன் என்று நீயும்..

கடைசியில் இருவரும் பேசாமல்

நம் இருவரின் கண்கள் பேசியதே

ஆனால் நீ மட்டும் என்னிடம் பேசவில்லையே..!

உன் வார்த்தைகள் கிடைக்காததால் 

இன்று...

கண்ணீரில் ஆறுதல் தேடுகிறேன்.

Sunday, 15 August 2010

உன் பூ முகம் கண்டதால்...

உன்னைக் கண்ட நாள் முதல்
நான் உன்னைக் காணும் நாள்வரை 
எப்பொழுதுமே உன்னைப் பற்றிய 
சிந்தனை மட்டும் தான் எனக்கு 
உன் பூ முகம் கண்டதால்...
என் மனதெங்கும் சொல்ல முடியாத 
அப்படியொரு சந்தோசம் எனக்கு ..
அந்த சந்தோசம் என்ன தெரியுமா ..?
உன் பூ முகம் தான் sssss
அடிக்கடி என்  கண்  முன்  தோன்றுவதால் .. 
என் மனதெங்கும் நீயே நிறைந்து இருக்கிறாய்..
உன்னைக் கண்ட அந்த ஒரு கணம் மட்டும் இல்லையடி 
கணம் கணம் உன்னையே நினைத்து 
கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறேன்
என்னோடு நீ ...
உன்னோடு நான் .....
இப்படியே எல்லாம் 
உன்னைப் பற்றியே நினைக்கிறேனடி 
என் ஆசைகள் அனைத்தையும் 
உன்னிடம் சொல்ல தவிக்கிறேனடி
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
sssss 
இந்த ஜென்மத்தில் எனக்கு பிடித்த
என் ப்ரியமனவளே அது நீ தானேடி
உண்மை சொன்னால் நேசிப்பாயா...???
என் செல்லமே................