Thursday, 30 September 2010

" உன் பொய் கோபம் "


பொய்யான உறவுகளுக்கு  முன்னால்...
புன்னகையும் ஒரு பொய் தான்..,
என் உண்மையான அன்புக்கு முன்னால்
உன் பொய் கோபம் கூட எனக்கு புன்னகை தான்..,


Saturday, 25 September 2010

" இனிமையான பயணம் "



வாழ்வின் இனிமையான
காலங்களைத் தேடித்தான் 
என் பயணம் ஆரம்பித்தது...
ஆனால்......
என் வாழ்வில்..........
உன்னைக் காணும் முன் 
எந்த எண்ணமும் இல்லாமல் 
இருந்த எனக்கு ..,
இனிமையான காதலை 
என் மனதில் வர காரணமாய் இருந்தவள் " நீ "
அதனால் தான் சொல்கிறேன்.  
இனிமையான பயணம் என்று..,
ம்ம்ம் 
காதல் வலியை உணர்த்தியவள் "நீ "
கவிதைனா என்னனு தெரியாத எனக்கு 
கவிதை வரிகளை .....
அழகாய் என் கண் முன் நிறுத்தி 
என் கைகளை பிடித்து 
எழுத கற்றுக் கொடுத்தவள் " நீ "
என் காதலே " நீ " எங்கு இருக்கிறாய் ...??
எப்பொழுது " நீ " என்னை காண இருக்கிறாய்...???
உன்னை காண எனக்கு ஆசையடி... 
வருவாயா என் செல்லமே......!!!






அனுபவித்திராத துக்கங்களை எல்லாம் 
அனுபவிப்பேன் என்று கூட நினைக்கவில்லை நான்.. 




என்னோடு " நீ " இருந்தா துக்கம் எனக்கு இருக்குமா..?
சொல்...




உன் பெயர் சொல்லி கவிதை எழுத ஆசை தான்
ஆனால்...,
ஒரு வேலை நீ என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டால்..
கவலை தான் .....
ம்ம்ம் அதற்காக தான் உன் பெயர் mention  பன்னல ....
எனக்கு என் காதல் கிடைக்கவில்லை என்றாலும் .... 
உன் நண்பனாகவே உன்னோடு நான் இருக்க ஆசைபடுகிறேன்.
ஆனா நான் சொல்லி என் காதல் கிடைக்காமல் போய்ட்டா ...?




உண்மை சொன்னால் நேசிப்பாயா...???

Monday, 20 September 2010

" என் வாழ்வில் அர்த்தம் கண்டேன் உன்னால் "


வார்த்தை  கூட வாசிக்க
வாசிக்க தான் அர்த்தம் புரிகிறது...
வாழ்க்கை கூட யோசிக்க
யோசிக்க தான் அர்த்தம்  புரிகிறது...

ஏனோ தன்னாலே உன்மேல் காதல் கொண்டேன்
எதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேன்

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்...
அதேபோல்...
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்...?


உன் வார்த்தைக்காக காத்திருக்கும்
nrramesh


  

Wednesday, 8 September 2010

" என் இரவில் "


கடல் வெள்ளம் போல் புகுந்து
தினந்தோறும் என் இரவில்
கனவுகள் வர வரம் தந்தவளே..
உன் காந்தப் பார்வையாலே
என் விழியின் கண்களுக்குள் இனித்தவளே..
என்னோடு நீ..
உன்னோடு நான்.. இருக்கையில்
தவறு நான் செய்யவில்லையே..!
ஆனால்........
பேசாமல் இருந்து கொண்டு
தண்டனை நீ தருகின்றாய் ...!!!

Friday, 3 September 2010

நீயே வேண்டுமடி எனக்கு...

உன் ரெட்டை ஜடை..,
ஒற்றைச் சிரிப்பு ,
ஓரப் பார்வை ,
உன் மௌன  மொழி ,
இதற்காக மட்டுமே
நீ அடிக்கடி என் கனவிலும்
என் நிஜ வாழ்க்கையிலும்
நீயே வேண்டுமடி எனக்கு...
உன்னோடு நான்...
என்னோடு நீ...


ப்ரியமுடன்
nrramesh