Wednesday, 30 November 2011

நட்பு காதலாகுமா..?






என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............ 

பல மணி நேரங்கள் 
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை 

ஏன்? 
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு 
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?.... 
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வரவேண்டும்..?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள் 
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா..?

Sunday, 27 November 2011

நீ வருவாய் என…





நேற்று பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான் உனக்காக 

நீ சென்ற உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என 
காத்து நிற்கிறேன்


அன்பே!
--------- 

நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவ் உலகில்
யாருமில்லா அனாதையாய்..!

உனை பார்த்த போது தான்
எனக்கும் ஒருவள்.., 

இந்த உலகில் என்று நினைத்தேன்..! 


அன்பே! 

---------

நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்தை  
எனக்கும் தருவாயா..?
உன் வருகைக்காக இவன் 






ப்ரியமுடன்
nrramesh 

Wednesday, 23 November 2011

" நிரம்பி வழியும் காதல் "






நினைவின் அடுக்குகளில்

மடிப்பு கலையாமல் ஏறிச் செல்கிறாய்..

உன் பாதம் பட்ட இடங்களில்

பூத்துக் கிடக்கிறது உன்மேல் வைத்த என் பாசம் ...


என் இதய பலூனில் நிரம்பி வழியும் உன் காதல்..

உன் ஒற்றைச் சொல்லில் வெடித்துச் சிதறி

பிரபஞ்சத்தை நிரப்ப பலூனாகிறது பிரபஞ்சமும்..


இலையோடு மழை பேசும் ரகசியமாய்

என் அலைபேசியோடு உன் குறுஞ்செய்தி..



ப்ரியமுடன்
nrramesh

Sunday, 20 November 2011

" என் காதல் "








கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி என் கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்...

இறந்து விடலாமடி ஒருகணம்
கடந்து போன நினைவுகளை சுமந்து வாழ்வது கடினமடி

ஒவ்வொரு இரவிலும்
உன்னோடு உரையாடிய காதல் வார்த்தைகள்
என் செவிகளில் ஒலிக்கி
தடி
இதை கேட்டு இதயம் தவி தவிக்கிதடி
தவி தவிக்கும் இதயத்தை கண்டு
கண்ணீராய் வருகுதடி என் கண்களில் 
என் காதலியே ...
உன் நினைவால்......
தினமும் இறக்கிறேன் தானடி
ஒவ்வொரு அணுவாக துடிப்பது நானடி
ஆனால்..,
உன்னை நோக்கி வளர்ச்சி அடைந்து செலிகிறதடி
என் காதல்

Saturday, 19 November 2011

என் காதலை உணர்வாயோ..?





உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்.., 
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல். 

உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்.., 

உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.

உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்.., 

உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.

உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்.., 

உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்.

உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது 

என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.

உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும் 

நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல். ...






ப்ரியமுடன் 
nrramesh 

Wednesday, 16 November 2011

என்ன சொல்ல போகிறாய்...?



வாழ் நாள் முழுவதும் 
உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்கதோ
என்று ஏங்கி கொண்டிருக்கிறேன்...





என்ன சொல்ல போகிறாய்...?

Sunday, 13 November 2011

நீ என்ன செய்வாய் அன்பே....???



என் பார்வைகளில்
நீ ஒழிந்திடலாம்
என் வார்த்தைகளை
நீ நிறுத்திடலாம்
என் மனதை
நீ எரித்திடலாம்
உன்மேல் வைத்த என் காதலை
நீ என்ன செய்வாய் அன்பே....???