உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்..,
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல்.
உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்..,
உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.
உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்..,
உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.
உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்..,
உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்.
உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது
என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.
உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும்
நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல். ...
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment