நினைவின் அடுக்குகளில்
மடிப்பு கலையாமல் ஏறிச் செல்கிறாய்..
உன் பாதம் பட்ட இடங்களில்
பூத்துக் கிடக்கிறது உன்மேல் வைத்த என் பாசம் ...
என் இதய பலூனில் நிரம்பி வழியும் உன் காதல்..
உன் ஒற்றைச் சொல்லில் வெடித்துச் சிதறி
பிரபஞ்சத்தை நிரப்ப பலூனாகிறது பிரபஞ்சமும்..
இலையோடு மழை பேசும் ரகசியமாய்
என் அலைபேசியோடு உன் குறுஞ்செய்தி..
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment