Saturday, 31 December 2011

தனிமையை தேடி






என் மனதிற்கு பிடித்தவள் " நீ " தான் 
அதனால் சொல்கிறேன் 
என் ப்ரியமானவள் " நீ " என்று..,


என் ப்ரியமானவளே நான் இன்று நானாக இல்லை
என் நிலையும் சொல்ல தெரியவில்லை 
புதிய உலகம் புதிய பூமி 
இதில் நான் புதிதாய் பிறந்தது போல் புதிய வாழ்க்கை....
என் சோகம் எல்லாம் சுகமாக்கினாய்...
என் தனிமை எல்லாம் தூரமாக்கினாய்...
இவை அனைத்தையும் தந்தவள் " நீ "
உனக்காய் ஒன்றும் செய்ய முடியாதவனாய் நான்..,
கண்ணீர் மட்டும் காணிக்கையாய் 
உன்னை ஏற்றுக்கொள்ள துணிவின்றி 
மீண்டும் தனிமையை தேடி பயணிக்கின்றான்...!





ப்ரியமுடன் 
nrramesh



Monday, 26 December 2011

உனக்காக நான் காத்திருப்பேன்


என்னை விட உன்னை அழகாய் பார்ப்பவர்கள்
இந்த உலகில் யாருமில்லை..,
உனக்காக நான் காத்திருப்பேன் என்றும்..........


ப்ரியமுடன்
nrramesh

Tuesday, 20 December 2011

" உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன் "



தொலை பேசியில் 
அன்பை தந்தாய்.....
உருவம் இன்றி உணர்வுகளுடன் வாழ்ந்தேன் ....

கணணியிலே உந்தன்
நிஜத்தை பார்த்தேன் ..
உணர்வுகளுக்கு உருவம் கிடைத்தது ......

உணர்வுகளை பிரிந்த போதே 

உள்ளம் தீயில் வெந்த வேதனையை உணர்ந்ததே ....
உந்தன் உருவத்தை எப்படி நான் பிரிவேன் ...

உன்னோடு வாழாத போதும் 

உன் உருவத்துடன் வாழ்ந்துவிடுகிறேன்
கற்பனையில் ஆவது ...









ப்ரியமுடன்
nrramesh

Wednesday, 14 December 2011

என் உயிர்................. " நீ "




யாரோ சொன்னார்கள்..,


" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
ஆனால்.., எனக்கோ
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
 "என்றும் உன் நினைவு " மட்டும் தான் ....


காரணம்....
நான் நேசிப்பவளும் " நீ " தான்.....
என்னை நேசிப்பவளும் " நீ "  மட்டும் தான்...
என் உயிர்................. " நீ "


Saturday, 10 December 2011

" நட்பா..? காதலா..?




நட்பா..? காதலா..?


நட்பு பெரியதா.. ? காதல் பெரியதா ..?
நண்பன் கேட்டான்


நான் முதலில் கற்றுக் கொண்டது
***  நட்பு தான் ***


நான் இது வரையில் காத்து வருவது
***  நட்பு தான் ***


என்னை நானாக பார்த்தது
***  நட்பு தான் ***


காதலின் இனிமையான பாகம்
***  நட்பு தான் ***




எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
" காதல் "  தான்
எனவே..,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.


" mm  "  S  நான் உன்னை காதலிக்கிறேன்....

i love you .... 
for ever .........


No matter how many times I get hurt because of you, 
I won't leave you. 
Because even if I have a hundred reasons to leave you, 
I'll look for that one reason to fight for you!!


There is only one reason I fight with you..
Always the same reason..
I love you and I don't want to lose YOU.




ப்ரியமுடன்
nrramesh

Monday, 5 December 2011

" உனக்காக மட்டுமே "



உனக்காக மட்டுமே 
என் இதயம் துடிக்க வேண்டுகிறேன்.

உன்னைப் பார்க்க என் கண்கள் துடிக்கிறது....... 
என் கண்களுக்கு நான் என்ன சொல்லி புரியவைப்பேன்....... 
" நீ "  என் "இதயம்" என்று.......

நீ சொல்ல தேவை இல்லை. 
என் இதயத்துக்கு தெரியும் நீ யாரு என்று

மெளனமாய் இருக்கும் என் மனது மெளனமாய் பேசுகிறது 
உன்னை தொலைத்து விட்டேனே என்று.........

மெளனமான வார்த்தை மெளனமாகி போனதடி பெண்ணே ..
என்னோடு நீ இல்லாமல்...

என்னோடு பேச ....
மீண்டும் " நீ " வருவாய் என்ற நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன் நான்..




ப்ரியமுடன்
nrramesh




Saturday, 3 December 2011

பூக்குமா வசந்தம்…







கண்கள் உனைக் கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு ..?
உன்னோடு ஒருவனப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா ..?
விடை தெரியா வினாக்கள் 
என்னுள் விளையாடி ஒய்ந்தன 
என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி 
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லடி 
அது நிச்சயமாய் காதல் தான் 
உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்..?
அதனால் தான்..,
என் முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது 
யாரும் அறியாமல் ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழை தான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்று தானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்








ப்ரியமுடன் 
nrramesh