என் மனதிற்கு பிடித்தவள் " நீ " தான்
அதனால் சொல்கிறேன்
என் ப்ரியமானவள் " நீ " என்று..,
என் ப்ரியமானவளே நான் இன்று நானாக இல்லை
என் நிலையும் சொல்ல தெரியவில்லை
புதிய உலகம் புதிய பூமி
இதில் நான் புதிதாய் பிறந்தது போல் புதிய வாழ்க்கை....
என் சோகம் எல்லாம் சுகமாக்கினாய்...
என் தனிமை எல்லாம் தூரமாக்கினாய்...
இவை அனைத்தையும் தந்தவள் " நீ "
உனக்காய் ஒன்றும் செய்ய முடியாதவனாய் நான்..,
கண்ணீர் மட்டும் காணிக்கையாய்
உன்னை ஏற்றுக்கொள்ள துணிவின்றி
மீண்டும் தனிமையை தேடி பயணிக்கின்றான்...!
ப்ரியமுடன்
nrramesh
No comments:
Post a Comment